Thursday, January 25, 2007

ரகசிய மெயில்

ரகசியமாய் ஒரு ஈமெயில் - அனுப்ப முடியுமா?


டோண்டு ராகவனுக்கு பின்னூட்டம் இடுவது எப்படி?


தேன்கூட்டில் தமிழ் மணத்தில் பதிவுகள் மாயம்!

[தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]

கசியமாய்.. ரகசியமாய்..

ஏதாவது செய்தி அனுப்ப வேண்டுமா? வந்து விட்டது புதிய ஈமெயில் வசதி!


நீங்கள் அனுப்ப வேண்டிய ரகசிய செய்தியை தட்டச்சி ஈமெயில் முகவரி கொடுத்து அனுப்பு என்று சொன்னால் போதும். பெறுநர் அந்த செய்தியைப் படித்து முடித்ததும் அந்த ஈமெயில் வந்த சுவடு தெரியாமல் அழிக்கப் பட்டு விடும். அங்கு மாத்திரம் அல்ல, அனுப்புநரிடம் கூட அந்த ஈமெயில் இருக்காது.


மக்கள் என்னென்ன மாதிரி எல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!!


நினைத்துப் பாருங்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் என்னென்ன மாதிரியான கண்டுபிடிப்புகள் வரக் கூடும்?!!

  1. அன்பு காதலன் தான் தேர்ந்தெடுத்த புதிய காதலிக்கு [ ;-) ] காதல் கடிதம் எழுதி தைரியமாக அவளிடம் கொடுக்கிறான். அவள் கோபமாக வாங்கி படிக்கிறாள். படித்து முடிக்கும் போது அவள் கையில் கடிதம் இருக்காது!
  2. அலுவலகத்தில் ஊதிய உயர்வு கடிதம் கைக்கு கிடைக்கிறது. தொகையைப் பார்த்து விட்டு, இப்போது வாங்கும் சம்பளத்தை விட இது எவ்வளவு அதிகம் என்று மனதுக்குள் கணக்கு போட்டுக் கொண்டே கண்களை மூடி ஒரு விநாடி சிந்தித்து விட்டு கண்களைத் திறப்பதற்குள் கடிதம் மாயம்!
  3. வங்கியில் காசோலை கொடுத்து டோக்கன் வாங்கி, டோக்கன் கொடுத்து பணம் வாங்கி எண்ணி முடிக்கும் போது, காசோலை காணலை [காணவில்லை]!
  4. தமிழ் மணமோ, தேன் கூடோ எங்கோ ஓரிடத்தில் இந்து மதம், இந்த மதம், அந்த மதம் என்று ஒரு பதிவைப் படித்து முடித்ததும் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்ய்க்க்க்க்.. பதிவு எங்கோ ஓடி ஒளி[ழி]ந்து விட்டது.
  5. டோண்டு ராகவன் பதிவுக்கு தைரியமாக பின்னூட்டம் இடலாம். வாசகர் பின்னூட்டத்தைப் படித்து முடித்ததும் அது மறைந்து விடும்!

2 பின்னூட்டங்கள்:

said...

//டோண்டு ராகவன் பதிவுக்கு தைரியமாக பின்னூட்டம் இடலாம். வாசகர் பின்னூட்டத்தைப் படித்து முடித்ததும் அது மறைந்து விடும்!//

அது வேற எங்கயும் forward ஆகிடாதே, :)))

சொந்த அனுபவத்தால கேக்குறேன்,
:(((

said...

ரகசிய மெயிலுக்கு வந்த ரகசிய மெயில் ;-)

- - - - - - - - - - - - - - - -
Anonymous has left a new comment on your post "ரகசிய மெயில்":

"டோண்டு ராகவன் பதிவுக்கு தைரியமாக பின்னூட்டம் இடலாம்."

அது மறையணும்னு அவசியம் இல்லை. ஆனால் அதனால பின்னூட்டமிடறவருக்கு பாதிப்பு இருக்காது. இதற்கு நிரூபணம்
.., .., .., .., .., .., ..,
இன்னும் பலர்.

எம்.மூர்த்தி
- - - - - - - - - - - - - - - -


பெயர்கள் நீக்கப் பட்டிருக்கின்றன!

சுபமூகா