Monday, January 09, 2006

தக தக தக ... தக்க!

ப்பு சப்பேயில்லாத கேள்விகள் என்றாலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது தங்க வேட்டை.
[சன் டிவி, சனி ஞாயிறு இரவு 9 மணி]

தகதகவென்று நிஜமாகவே மின்னுகிற தேவதை மாதிரி ரம்யா கிருஷ்ணன். சேலையில் என்ன மாதிரி ஜரிகை, என்னென்ன வகை நகைகள் என்றெல்லாம் குட்டி லெக்சர் கொடுக்கும் ரம்யா தன் இளமை கட்டுக்கோப்பு ரகசியத்தை மட்டும் இன்னும் சொல்லவில்லை.

இந்த வாரம் யாராவது கவனித்தீர்களா? போட்டியாளர்கள் அறிமுகப் பகுதியில் பழைய 'கோடீஸ்வரன்' இசைத் துணுக்கை சேர்த்திருந்தார்கள்.

ரம்யா அப்போதைக்கப்போது வார்த்தைகளில் சிறிது திணறினாலும் அருமையாகவே நிகழ்ச்சியை எடுத்து செல்கிறார். 'அதுக்கும் மின்னாடி..' அவ்வப்போது தலைகாட்டுகிறது. (மின்னாடி - தூய தமிழ் வார்த்தை என்று யாரோ சொல்கிறாற்போல் கேட்கிறது!)


'ந்த வயசிலே இதெல்லாம் உனக்கு தேவையா?' என்று கிண்டல்களை எல்லாம் தூரப் போட்டு விட்டு ஒரு பாட்டி இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சொல்ல வேண்டும். 'வயது முக்கியமில்லை சாதனை படைக்க' என்று எடுத்துச் சொன்னது நிகழ்ச்சி. பாட்டி அருமையாக ஒரு பாட்டு சுந்தராம்பாள் ஸ்டைலில் நடுங்கிக் கொண்டே பாடி ஒரு விநாடி கண்களில் அருவியைத் தேக்க வைத்தார். ரம்யா கிருஷ்ணனுக்கு திருஷ்டி வேறு கழித்து, ஆசி வழங்கினார். ஒரு தவறான விடையும் சொன்னார்!

மக்களை நன்றாக சென்றடைய வேண்டும் என்பது தான் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் என்பது நன்றாக தெரிகிறது. இரண்டு பேர் அழைக்கப் படுகிறார்கள். ஒருவர் கார்ட் தேர்ந்தெடுக்க, க்ளூ கார்ட் இன்னொருவருக்கு கொடுக்கப் படுகிறது. 'உதவி' என்று சொல்லும் போது மட்டும், விடை தெரிந்திருந்தால் இன்னொருவர் க்ளூ சொல்வார். அந்த க்ளூ கூட தவறாக சொல்லப் படும் போது அவசர அவசரமாக ரம்யா 'அது தவறு' என்று சொல்வதுமில்லாமல், அவரே சரியான க்ளூவைக் கொடுக்கிறார். நேயர் புதையலுக்கு இன்னும் மூன்று கிராம் தங்கம் கிடைப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள்.

மூன்றாவது ரவுண்ட் மட்டும் கொஞ்சம் குழப்பும் ரவுண்ட். இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்தைக் கூட்டும் இடம் இது தான் என்று சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஒரு நிமிடத்துக்குள் நேயர்களை எது சரியான விடை என்று ஊகிக்க விடாமல் காமிரா கோணங்கள் செய்து விடுகின்றன. நிகழ்ச்சியைக் காண்பவர்களுக்காக ஒரு பத்து விநாடிகள் பொருத்த வேண்டிய வார்த்தைகள் இருக்கும் அந்த பலகையைக் காண்பித்தால் நலம்.

இந்த ரவுண்டுக்காக மெனக்கெடும் கேள்வி தயாரிப்பாளருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

இதெல்லாம் சரி, தங்கம் கிடைத்து விட்டது என்பதற்காக இப்படியா குண்டக்க மண்டக்க என்று டான்ஸ் ஆட வேண்டும்?! 'வீல்ல்ல்ல்ல்ல்..' என்று பூதத்தையே நிஜமாக பார்த்த மாதிரி கத்தல் வேறு!

இந்த விளம்பர யுகத்தில் இதெல்லாம் தேவையே தானோ? இல்லாவிட்டால், இந்தப் பதிவு வந்திருக்குமா என்ன?!


சன் டிவி பாணியில் முடித்து விடவா?
மொத்தத்தில் தக தக தங்க வேட்டை ..

தக்க!

3 பின்னூட்டங்கள்:

said...

இனிய சுபமூகா,

யாருக்குத் தங்கம் கிடைக்கிறதோ இல்லையோ, செல்பேசி கும்பினிக்காரர்களுக்குக் கிடைத்துவிடும்.

நேயர் புதையலுக்காக குறுஞ்செய்திகள் அனுப்பவேண்டுமே. எத்தனை செய்திகள் தோராயமாகப் போகும்? ஒரு செய்திக்கு ஒர் ரூபாய்.

அன்புடன்
ஆசாத்

said...

ஆசாத்ஜி அது ஒரு ரூபாய்தானா, நான் ஆறு ரூபாய்னு கேள்விப்பட்டேன். !!!!!

said...

ஆசாத், மோகன் தாஸ் - கருத்துகளுக்கு நன்றிகள்.

ஆசாத் - நான் ஞாயிறு அன்று புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தேன். அருமையான கவியரங்கத்தைக் கண்டு களித்து வந்தேன். [தாங்களும் வந்திருந்தீர்களா?]