Thursday, December 02, 2004

ஹிஹி.. மையல்!

நான் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறது. அதுவும் உடனடியாக!!

பாருங்கள்.. என் நேற்றைய மடலை அடித்து முடித்து நிமிர்வதற்குள்
மரத்தடியில் இன்று ஒரு மடல். சுரேஷ் கண்ணன் எழுதியிருக்கிறார்:

நகைச்சுவைக்கான சிறுகதைப் போட்டியில்,

மூன்றாம் பரிசு பெற்றிருக்கிற
நாகரத்தினம் கிருஷ்ணாவின்
'ருக்குமணியின் சபதம்' என்கிற சிறுகதை

என்னைக் கவர்ந்தது. இதற்கு முன்னால்
வெளியான முதல், இரண்டாம்,
மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதைகளை விட,

இந்தக் கதை - என்னைப் பொருத்த வரை -
சிறப்பாகவே இருந்தது.

மருந்துக்கும் சிரிப்பே வராத முந்தையக்
கதைகளுக்கு பரிசு கொடுத்திருப்பது
நடுவர்களின் நகைச்சுவை ரசனையை
கேள்விக்குரியதாக ஆக்கியிருக்கிறது.

முதல் மூன்று பரிசு பெற்றவர்கள்

(ஆனந்த் ராகவ், மாலதி, சுபமூகா கணேஷ்)
மற்றும் இந்தக் கதையை எழுதிய நாகி
உட்பட அனைவரும் இணையத்திலும்

எழுதுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

--

படித்து விட்டு மனம் விட்டு
சிரித்துக் கொண்டிருக்கிறேன்!

அன்புடன்,
'சுபமூகா'

4 பின்னூட்டங்கள்:

said...

இன்னும் நா.கி.யின் கதையைப் படிக்கவில்லை. நீங்க படித்து விட்டீர்களா? உங்க எண்ணம் என்ன ;;)

(ஆனால், ஆன்ந்த் ராகவின் நகைச்சுவையை விட உங்களின் கதையில் சிரிப்பு அதிகம் வந்தது!)

said...

நானும் படிக்கவில்லை.
ஆவலுடன் காத்திருக்கிறேன் :-))

தங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன்,
சுபமூகா

said...

அன்பு சுபமூகா கணேஷ்,

என் கடிதம் உங்களை சிரிக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அது மகிழ்ச்சி சிரிப்பா, விரக்தி சிரிப்பா என்று தெளிவுபடுத்தினால் நல்லது. :-)

நிற்க, நான் அமுதசுரபி நகைச்சுவைப் போட்டிக் கதைகளை பற்றிய என் கருத்துக்களை மடற்குழுவில், தலையின் பின்னால் ஒளிவட்டம் சுழலும் விமர்சகனாக அல்லாமல், அந்தப் பத்திரிகையின் வாசகனாகவே பகிர்ந்து கொண்டேன்.

ஆனந்த் ராகவ், முன்பு ரா.கா.கியில் நீச்சல் குளம் என்கிற ஒரு படைப்பை அனுப்பிய போது அதைப் படித்துவிட்டு அலுவலகம் என்றும் பாராமல் விழுந்து விழுந்து சிரித்ததை அவரிடமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அப்படியாப்பட்டவர் எழுதிய கதை நகைச்சுவைக் கதைகள் போட்டியில் முதற்பரிசு பெற்றிருக்கிறது என்னும் போது மிக்க ஆவலோடு படித்த எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அதற்குப் பின்பு வந்த கதைகளும் அதைவிட சாதாரணமாகவே இருக்கவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளே இப்படி என்றால், தேர்ந்தெடுக்கப்படாத கதைகள் எப்படி இருக்கும் என்று ஆச்சரியமாக இருந்தது.

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவைக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. தேவன், கல்கி, காலம் முதல் பாக்கியம் ராமசாமி, சுஜாதா என்று நீள்கிற வரிசை அது. ஆனால் சமீப காலங்களில் அம்மாதிரியான தரமான நகைச்சுவைக் கதைகளை காணமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் அவ்வாறு எழுத நேர்ந்தது.

ஓரு படைப்பாளி எல்லாவித விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டு, அது ஆக்கப்பூர்வமானதாக இருந்தால் அதற்கேற்றவாறு திருத்திக் கொள்வதுதான் அவருக்கு முன்னேற்றத்திற்கான சாலையாக இருக்கும்.

நான் எழுதியதையும் அவ்வாறே நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். மற்றபடி யாரையும் புண்படுத்தவோ, புகழவோ எனக்கு ஆசையுமில்லை, அவ்வாறான அவசியுமும் எதுவுமில்லை.

Suresh Kannan

said...

அன்பு சுரேஷ்,

விரக்தி சிரிப்பா?! அதீதக் கற்பனை!

தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்.

அன்புடன்,
'சுபமூகா'