Wednesday, May 31, 2006

சுபமூகாவைப் பற்றி..

மதுமிதா 'சுபமூகாவின் ஆட்டோகிராப்'
அப்படின்னு ஒரு புத்தகம் எழுதப் போறதா
கேள்விப் பட்டேன்! அவங்களுக்கு
உதவியா இருக்கட்டுமேன்னு இந்தக் குறிப்பு ;-))

---------------------------------------------------------


வலைப்பதிவர் பெயர்: கணேச மூர்த்தி [புனைப் பெயர்: சுபமூகா]

வலைப்பூ பெயர் : சுபமூகா பக்கங்கள்

சுட்டி(உர்ல்) : http://puthupunal.blogspot.com

ஊர்: பெங்களூர்

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
நிறைய பேர் எழுதிக் கொண்டிருக்க எனக்கும் ஆசை வந்தது!

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 21 Aug 2004
இது எத்தனையாவது பதிவு: 32


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
நான் எழுதுவதை யாராவது படித்தாக வேண்டும் என்று தான்!

சந்தித்த அனுபவங்கள்:
நான் 1984இல் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். கல்கி, சாவி, குமுதம், விகடன், இதயம் பேசுகிறது, குங்குமம் என எல்லா பத்திரிக்கைகளிலும் கதைகள் வந்துள்ளன.

விகடன் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு, கல்கி நகைச்சுவை கதைப் போட்டியில் பரிசு, குமுதம் சிறுகதைப் போட்டியில் பரிசு, அமுதசுரபி அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை கதை போட்டியில் இரண்டாம் பரிசு, அமரர் சாவி அவர்களின் பாராட்டு என்று எல்லாவற்றையும் இப்போது அசை போடும் போதும் இனிக்கிறது!



பெற்ற நண்பர்கள்:
நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத அவர்கள் என்னவோ ரொம்ப நாட்கள் பழகியது போல் பேசும் போது இந்த இணைய உலகத்தின் இணையில்லாப் பெருமை புரிபடுகிறது!

கற்றவை:
இன்னும் நிறைய கற்க வேண்டும் என்பதே!

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
'தாங்கள் அனுப்பிய கதை/கட்டுரை/கவிதை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்கிற துண்டு சீட்டு இங்கு இல்லை! ;-)

இனி செய்ய நினைப்பவை:
நிறைய இருக்கின்றன. சோம்பேறித் தனம் முதலில் இருக்கிறது!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
அலுவலகத்தில் Oracle உடன் காதல் கொண்ட ஒரு Project Leader. பெங்களூரில் பணி. தற்காலிகமாக சென்னை! ஒன்பது மாதங்கள் லண்டனில் இருந்த அந்த நாட்கள் மறக்க இயலாத நாட்கள். நிறைய எழுத நினைத்தாலும் அலுவலகப் பணி கட்டிப் போட்டு விடுகிறது.



இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

1 பின்னூட்டங்கள்:

said...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
'தாங்கள் அனுப்பிய கதை/கட்டுரை/கவிதை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்கிற துண்டு சீட்டு இங்கு இல்லை! ;-)

இந்த வரிகளுக்குள் மெல்லிய சோகம் கலந்த ஏமாற்றம் தெரிகிறது. அதற்கு பின் நிறைய இதழ்களில் உங்கள் எழுத்து வந்திருக்கிறது. பரிசும் பெற்றிருக்கிறது என்னும்போது இந்த ஏமாற்றம் ஒரு வேகத்தை உங்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் உணரமுடிகிறது.

வலைப்பதிவை முழுவதும் படித்து மீண்டும் எழுதுகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.