Monday, January 17, 2005

ஞாபகம் வருதே?!

எக்கச்சக்கமாக பாடல்கள் வந்தாயிற்று.

பழைய பாடலின் நினைப்பூட்டுதல் இல்லாமல்
புதுப் பாடல் அமைப்பது என்பது கொஞ்சம்
கடினம் தான். இசையமைப்பாளர்கள் இதைத் தவிர்க்க
ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். ஆனால்,
அப்படியும் தப்பி வந்து விடுகின்றன சில பாடல்கள்:

காதலர் தினம் படப்பாடல்
'என்ன விலை அழகே?'
பழைய
'தங்கப் பதக்கத்தின் மேலே..' பாடலை ஞாபகப் படுத்தியது.


பாய்ஸ் படப்பாடல்
எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா
எனக்கு நிரம்பவே பிடித்துப் போன பாடல்.

இதுவும் பழைய பாடலை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததோ
என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.


அட, ஆமாம்!
பால் போலே பதினாறு.. இந்த வரியைப் பாடி விட்டு,
பாசமலரின் இந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள்..

மலர்ந்தும் மலராத...

கொஞ்சம் கிட்ட வருகிற மாதிரி இல்லை??

2 பின்னூட்டங்கள்:

said...

Vaanga Sir. Eppadi irukeenga? Romba Nalachey ungalai paarthu? Appo appo thalaiya kaattungappa...

said...

விஜய், தங்கள் நல விசாரிப்புக்கு நன்றி!

மூர்த்தி, வாடகைக்கு விடவில்லை. வீட்டையே கொடுத்து விட்டு, நான் வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்! :-))

அன்புடன்,
'சுபமூகா'