நீ தான் என்னவள்!
ஏனோ இன்று எனக்குத் தோன்றுகிறது -
நீ தானே என்னவள் என்று!
கடந்த மூன்று வாரங்களாகப் போக நினைத்து முடியாமல் போய், இன்று அந்தப் படத்தைப் பார்த்தாகி விட்டது!
முங்காரு மளே - Mungaaru Malae - கன்னடத் திரைப் படம்!
தியேட்டரை விட்டு வெளியே வரும் போது எல்லோரும் துண்டால் தலையைத் துவட்டிவிட்டவாறே வருகிறார்கள். அவ்வளவு அழகாக படம் முழுக்க மழையும் நடித்திருக்கிறது.
படத்தின் உயிர் நாடி - ஒளிப்பதிவு. [க்ருஷ்ணா] தூள் கிளப்பியிருக்கிறது கேமிரா. அதுவும் மெர்க்கரா பகுதி காட்சிகள் மனதை அள்ளுகின்றன.
அடுத்து - திரைக்கதை! கதை என்று சொல்வதை விட கவிதை என்று சொல்ல வேண்டும்.
வசனங்கள் நிறைய என்றாலும் அலுக்காத வசனங்கள். வசனம் பேசுகிறார்கள் என்பதே தெரியாமல மிக இயல்பாக எல்லா நடிக/நடிகைகளும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
மக்களை ஈர்த்த மிக முக்கியமான மற்றொன்று - அருமையான பாடல்கள்! அட்டகாசமான இசை! [மனோ மூர்த்தி - கலிபோர்னியா! யாரப்பா இவர்? இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? :-)]
சாதாரண ஒரு காதல் கதையை இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார்கள். முழுக் குழுவுக்கும் ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். இயக்கியிருப்பவர்: யோகிராஜ் பட்.
நாயகன் கணேஷ். உதயா தொலைக்காட்சியில் வணக்கம்-வணக்கம்-வணக்கம் என்று சிட்டிபாபு ஸ்டைலில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவர். மிக மிக மிக அருமையாக அந்த நாயகன் பாத்திரத்துக்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார்.
நாயகி சஞ்சனா. அழகாக சிரிக்கத் தெரிந்த தேவதை. இடைவேளைக்குப் பிறகு நன்றாகவும் நடித்திருக்கிறார். அட விடுங்க, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்ப் படத்தில் பார்க்கத் தானே போறீங்க!
பெண்ணின் தந்தையாக அனந்த் நாக்! பாந்தமான 'அட' என்று வியக்க வைக்கிற அவரை சார்ந்த காட்சிகளை அருமையாக உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.
பெங்களூர் மக்கள் மறக்காமல் படத்தைப் பார்த்து விடுங்கள்!
[முதல் இரண்டு வரிகள் -
முங்காரு மளே படத்தின் தாளம் போட
வைக்கும் பாடல் வரிகள்!]
3 பின்னூட்டங்கள்:
you have given nice comments....
Especially Ithanai nallai engirunthai about Manomoorthy... nice
//நாயகி சஞ்சனா. அழகாக சிரிக்கத் தெரிந்த தேவதை. இடைவேளைக்குப் பிறகு நன்றாகவும் நடித்திருக்கிறார். அட விடுங்க, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்ப் படத்தில் பார்க்கத் தானே போறீங்க!//
அவங்க ஏற்கெனவே ஒரு தமிழ் படத்தில் நடிச்சுட்டு போயே போயிட்டாங்க.. 'கொக்கி'
கௌதம்,
தகவலுக்கு நன்றி.
Post a Comment