எங்கேயும் எப்போதும் ராஜா!
இரண்டு ஞாயிறுகள் 1130 முதல் 1430 வரை விஜய் டிவியை விட்டு அங்கு இங்கு நகரவில்லை!
அருமையான நிகழ்ச்சி!
சில பாடல்களைக் கேட்ட போது இளையராஜா ரொம்ப ரொம்ப பெரிய ராஜாவாக வானைத் தொட்டுக் கொண்டிருந்த மாதிரி தோன்றியது.
ஆஹா! அந்த பழைய பாடல்கள்! புல்லரிக்க வைத்து விட்டன!
அன்னக்கிளி உன்னைத் தேடுதே! -- இந்த பாடல் அவ்வளவாக அந்த நாட்களில் என்னைக் கவரவில்லை. ஜானகி அவர்கள் இந்தப் பாடலை எவ்வளவு அனாயாசமாய் பாடியிருக்கிறார் என்று இப்போது தோன்றுகிறது. நிகழ்ச்சியில் சித்ரா இந்தப் பாடலைப் பாடினார். அவர் முக பாவத்தைப் பார்த்த போது, ரொம்ப கஷ்டப் பட்ட மாதிரி தோன்றியது! ஜானகி அவர்களுக்கு ஒரு சல்யூட்!!
எஸ்பிபி, ஹரிஹரன், கார்த்திக் என அனைவரும் அருமையாக பாடினார்கள். 'என் இனிய பொன் நிலாவே!' - கார்த்திக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டார்!
'மாஞ்சோலை கிளி தானோ?' -- ஹரிஹரன் கொஞ்சம் திணறித் தான் போனார்! இளையராஜா!!!!
கோரஸ் பாடின அனைத்து குழுவினரும் -- கொடுத்து வைத்தவர்கள்! வேறு என்ன சொல்வது!
விவேக்-பார்த்திபன் - எங்கே தொட்டாலும் இசை - நல்ல ஐடியா தான். 'நீங்க நல்லவரா கெட்டவரா?' கேள்விக்கு விவேக் கொடுத்த பதிலைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது. அதற்கு அரங்கம் முழுக்க கைத்தட்டல் வேறு!
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ? -- நிகழ்ச்சியில் இந்த பாடல் ஒரு மகுடம் என்று சொல்லலாம். பாடலும் சரி, இசையும் சரி - அரிய அனுபவம்.
'மாங்குயிலே பூங்குயிலே' பாடலை இளையராஜா 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை' ராகத்தில் பாடிய போது 'அட!' என்று தோன்றியது.
எங்கேயும் எப்போதும் இசை ராஜா!
அன்புடன்,
'சுபமூகா'