Thursday, April 14, 2011

சிந்தைக்குள் ஆடும் ஜீவன்

நான் மனதில் தளர்ந்திருந்த பல தருணங்களில் இசையின் பக்கம் சாய்ந்து விடுவேன். 


பழையதோ புதியதோ.. இளையராஜாவோ ரஹ்மானோ.. ஒரு மணி நேரம் பாடல்களைக் கேட்டு மனதை சமாதானப் படுத்திக் கொண்டு, புதிய மூச்சுக் காற்றுடன் திரும்ப மீள்வேன்.

சித்ராவின் குரலில் நெருப்பிலிருந்து எழுந்து பறக்க வைக்கும் வசீகரம் உண்டு.


மனதுக்குள் ஊடுருவி, துன்பங்கள் எல்லாவற்றையும் களைந்தெரியும் வித்தை உண்டு!

எல்லோர் மனதிலும் புன்னகையுடன் வீற்றிருக்கும் அரிய பாடகிக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம்.  


எல்லாம் வல்ல இறைவன் இந்தத் துயரத்திலிருந்து மீளும் வாய்ப்பை சித்ராவுக்கு வழங்கட்டும்!