Tuesday, January 17, 2006

என்னை நோகடிக்க வருவாளோ?

பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக தேவாவின் நேர்காணலை சன் டிவி வழங்கியது. தேவா சொன்ன இந்த நிகழ்வு என்னை சிரிக்க வைத்ததோடல்லாமல் நிரம்ப சிந்திக்க வைத்து விட்டது.

சென்னையில் நடந்த ஒரு பெரிய விழாவில் தேவா சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இருந்த போது, ஒரு விஐபி பேச்சாளர் பேச ஆரம்பித்தார். எல்லோருக்கும் நல்வரவு சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பெருந்தகை தேவாவைப் பற்றி பேச்சை ஆரம்பித்தபோது -

'தேவாவைப் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர் இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் அரிய ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். அவர் பாடல்களை எல்லாம் கேட்கும் போது எப்படி தான் இவர் இந்த மாதிரி பாடல்கள் அமைக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன். ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் அடக்கமாக இருப்பவர். உதாரணத்திற்கு ஒரு பாடலை சொல்ல வேண்டும்.

'என்னைத் தாலாட்ட வருவாளோ!' என்றாராம்.

தேவா உடனே வேகவேகமாக கையசைத்து 'ஐயோ, அது நான் இசையமைத்ததில்லை! இளையராஜா!' என்று அபிநயத்தாலே சொல்லிப் பார்த்தாராம். 'தேவா, நீங்கள் என்றைக்கும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்!' என்று சொல்லி விட்டு, 'அப்புறம்.. இந்தப் பாடலைப் பாருங்கள் -

இன்னிசை பாடிவரும்... ' என்றாராம்!!!

'அடடா, அது எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தது!' என்று கொஞ்சம் உரக்கவே 'எஸ்..' என்று ஆரம்பிக்க 'எஸ் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்!' என்று அடுத்த பாடலுக்கு தாவி விட்டாராம்.

'அன்றைக்கு அவர் சொன்ன பாடல்களில் ஒன்று கூட என்னுடையதில்லை என்று வருந்தினேன்!' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் தேவா.

உடனே சமயோசிதமாக 'கவலைப் படாதே சகோதரா!' இசைத் துணுக்கை ஒளிபரப்பினார்கள்.

லட்சோப லட்சம் பேரை சென்றடையும் ஒரு பேட்டியில் மனதார ஒரு கருத்தை இப்படி சொல்ல எல்லோராலும் முடியாது என்று ஒரு கணம் எனக்கு தோன்றியது.

4 பின்னூட்டங்கள்:

Boston Bala said...

நிஜமாகவா :ஓ!

ramachandranusha(உஷா) said...

ரொம்ப நல்லா இருக்கு நீங்க சொன்னது. தேவாவின் சிரிப்பு கவனித்திருக்கீங்களா?, அந்த சிரிப்பு எனக்கு மிகப் பிடிக்கும். அகம் மலர்ந்து முகம் சிரிக்கும்.

சுபமூகா said...

பாலா - கருத்துக்கு நன்றி.

உஷா - கடவுள் மனிதனுக்குக் கொடுத்த வரம் - சிரிப்பு. அதை சிறப்பாக செய்பவர் வாழ்க்கையில் நிச்சயம் வெல்வர். நன்றி.

சுபமூகா said...

Testing to my own blog, ignore this