Monday, April 28, 2014

Google Self Driving Car







லது கையை வெளியே நீட்டி -
left indicator  போட்டபடி
straight ஆகப் போகும்
இந்திய வாகன ஓட்டிகளுக்கு
ஈடு கொடுக்குமா
Google Self Driving Car??!




Sunday, March 17, 2013

எங்கேயும் எப்போதும் ராஜா!


ரண்டு ஞாயிறுகள் 1130 முதல் 1430 வரை  விஜய் டிவியை விட்டு அங்கு இங்கு நகரவில்லை!

அருமையான நிகழ்ச்சி!

சில பாடல்களைக் கேட்ட போது இளையராஜா ரொம்ப ரொம்ப பெரிய ராஜாவாக வானைத் தொட்டுக் கொண்டிருந்த மாதிரி தோன்றியது.

ஆஹா! அந்த பழைய பாடல்கள்! புல்லரிக்க வைத்து விட்டன!

அன்னக்கிளி உன்னைத் தேடுதே! -- இந்த பாடல் அவ்வளவாக அந்த நாட்களில் என்னைக் கவரவில்லை. ஜானகி அவர்கள் இந்தப் பாடலை எவ்வளவு அனாயாசமாய் பாடியிருக்கிறார் என்று இப்போது தோன்றுகிறது. நிகழ்ச்சியில் சித்ரா இந்தப் பாடலைப் பாடினார். அவர் முக பாவத்தைப் பார்த்த போது, ரொம்ப கஷ்டப் பட்ட மாதிரி தோன்றியது! ஜானகி அவர்களுக்கு ஒரு சல்யூட்!!

எஸ்பிபி, ஹரிஹரன், கார்த்திக் என அனைவரும் அருமையாக பாடினார்கள். 'என் இனிய பொன் நிலாவே!' - கார்த்திக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டார்!

'மாஞ்சோலை கிளி தானோ?' -- ஹரிஹரன் கொஞ்சம் திணறித் தான் போனார்!  இளையராஜா!!!!

கோரஸ் பாடின அனைத்து குழுவினரும் -- கொடுத்து வைத்தவர்கள்!  வேறு என்ன சொல்வது!

விவேக்-பார்த்திபன் - எங்கே தொட்டாலும் இசை - நல்ல ஐடியா தான். 'நீங்க நல்லவரா கெட்டவரா?' கேள்விக்கு விவேக் கொடுத்த பதிலைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது. அதற்கு அரங்கம் முழுக்க கைத்தட்டல் வேறு!

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ? -- நிகழ்ச்சியில் இந்த பாடல் ஒரு மகுடம் என்று சொல்லலாம். பாடலும் சரி, இசையும் சரி - அரிய அனுபவம்.

'மாங்குயிலே பூங்குயிலே' பாடலை இளையராஜா 'ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை' ராகத்தில் பாடிய போது 'அட!' என்று தோன்றியது.

எங்கேயும் எப்போதும் இசை ராஜா!

அன்புடன்,
'சுபமூகா'

Monday, July 23, 2012

ஆலயம் - தன்னந்தனியே ஒரு குழந்தை!

ருணகிரி கோவிலை விட்டு வெளியே வரும் போது சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்து கேட்டான்.


"குழந்தை எங்கே?"

"அவ குரு கூட விளையாடிகிட்டிருக்கா!" என்றாள் ப்ரியா.

அது ஒரு பெரிய கோவில். அருமையான சுற்றளவு. பெரியவர்கள் அந்த கோவிலை ஒரு முறை சுற்றி வருவதற்குள் ஆயாசப் பட்டு விடக் கூடிய அளவுக்கு பெரிய கோவில் என்று சொல்லலாம்.


ஆனால் குழந்தைகள் இந்த கோவிலுக்குள் நுழைகிற போது, அவர்கள் முகத்தில் பிறக்கும் அந்த அபரிமிதமான மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே?   பெரியவர்கள் ஒரு முறை சுற்றி வரும் முன்னர், அவர்கள் மூன்று முறை சுற்றி வந்து, குதி குதி என்று குதித்து தங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்வார்கள்.


 அவர்கள் போடுகிற சத்தம் பிரகாரங்களுக்கு பயணம் செய்து எதிரொலியோடு இரட்டிப்பாக திரும்பும்.






குரு அந்த கோவிலுக்குள் நுழைகிற போதே, தன் மானசீக பேருந்தை ஓட்ட ஆரம்பித்து விடுவான். அதி பயங்கர வேகத்தில் அந்த பேருந்து உறுமிக் கிளம்பும். எண்பது,  நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போகிற மகிழ்ச்சி அவன் உடல் முழுக்க வியாபித்திருக்கும்.

அருணகிரியும் ப்ரியாவும் கோவிலை விட்டு வெளியேறி, இரண்டு தெருக்கள் தாண்டியிருக்கும் தங்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர்.  அப்போது எதிர்ப்படுகிற தனது பழைய ஆசிரியரை வணங்கி "எப்படி இருக்கீங்க சார்?" என்று நலம் விசாரிக்கிறான் அருணகிரி.  அவரைப் பார்த்து நிரம்ப நாட்களாகி விட்டிருந்தபடியால்,  பழைய கதைகளைக் கொஞ்சம் கிளறி விட்டு, அங்கிருந்து நகர,  அரை மணி நேரமாகி விடுகிறது.

வீட்டுக்குள் நுழைகிற தம்பதிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.  வீட்டில் குரு இருந்தான். ஆனால் குழந்தை இல்லை!

"எங்கடா சரண்யா?" என்று மிரட்டும் தொனியில் அப்பாவின் குரல் வரவும், பயத்தில் அழ ஆரம்பித்து விடுகிறான் குரு.

குழந்தையைக் கூட்டிக் கொண்டு பிரகாரத்தில் ஒரு முறை வலம் வந்த குரு, அவளை துர்க்கையம்மனின் ஆலயத்தில் விட்டு விட்டான். குழந்தை அவனிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டு தம்பதியரும் கோவிலை விட்டு வெளியேறி விட்டனர்.

பதற்றம் மேலோங்க திரும்ப கோவிலுக்கு ஓடி வருகின்றனர் தம்பதியர். ஆனால், அதற்குள் கோவில் பூட்டப் பட்டு விட்டது!

அக்கம்பக்கம் விசாரித்து, அந்த கோவிலில் வேலை செய்கிற ஒருவரின் வீட்டை அணுகி, உதவி கேட்கின்றனர்.

"இல்லைங்க, கோவிலைப் பூட்டிட்டா, திரும்ப காலையில் தான் திறப்பாங்க. காலம் காலமா இருக்கிற பழக்கங்க, மாத்த முடியாது. குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது. அந்த தாயை வேண்டிக்கிட்டு நிம்மதியா போய் தூங்குங்க!"  என்றவர் கோவில் இருக்கும் திசையைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார்.

அருணகிரி அந்த கோவிலின் உயர் அதிகாரியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, கெஞ்சிக் கேட்டுப் பார்க்கிறான். அதே பதில்!

எல்லோர் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது அருணகிரிக்கு. இரவு முழுக்க அந்த கோவிலின் பூட்டிய கதவுக்கு முன் கழிக்கிறது அந்த குடும்பம்.

மறு நாள் காலை சிறிது சீக்கிரமாகவே கோவில் திறக்கப் பட்டு விடுகிறது.  


குழந்தையைத் தேடி, கோவிலுக்குள் ஓடுகின்றனர் தம்பதியர். முழு பிரகாரத்தையும் சுற்றி வருகின்றனர். குழந்தை அழுகிற குரல் எங்காவது கேட்கிறதா என்று உற்று கவனித்தபடி நடக்கின்றனர்.

ஒரு வேளை?  தெப்பக்குளத்தில் கொஞ்சம் நடுக்கத்துடன் எட்டிப் பார்க்கின்றனர். எங்கும் குழந்தை இல்லை. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியபடி இருக்க, துர்க்கா பரமேஸ்வரி ஆலயத்தை அடைகின்றனர்.

துர்க்கை சிலையின் அருகில் அந்த குழந்தை அமர்ந்திருக்கிறது. என்னவோ புரியாத மொழியில் தனக்கு தானே பேசியபடி இருக்கும் அந்தக் குழந்தையின் கீழ் உதட்டுக்கருகில் சர்க்கரை பொங்கலின் மீதமான இரண்டு பருக்கைகள் ஒட்டியிருக்கின்றன!


[வேதாரண்யம் துர்க்கா பரமேஸ்வரி ஆலயத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப் பட்டது]

Thursday, April 14, 2011

சிந்தைக்குள் ஆடும் ஜீவன்

நான் மனதில் தளர்ந்திருந்த பல தருணங்களில் இசையின் பக்கம் சாய்ந்து விடுவேன். 


பழையதோ புதியதோ.. இளையராஜாவோ ரஹ்மானோ.. ஒரு மணி நேரம் பாடல்களைக் கேட்டு மனதை சமாதானப் படுத்திக் கொண்டு, புதிய மூச்சுக் காற்றுடன் திரும்ப மீள்வேன்.

சித்ராவின் குரலில் நெருப்பிலிருந்து எழுந்து பறக்க வைக்கும் வசீகரம் உண்டு.


மனதுக்குள் ஊடுருவி, துன்பங்கள் எல்லாவற்றையும் களைந்தெரியும் வித்தை உண்டு!

எல்லோர் மனதிலும் புன்னகையுடன் வீற்றிருக்கும் அரிய பாடகிக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம்.  


எல்லாம் வல்ல இறைவன் இந்தத் துயரத்திலிருந்து மீளும் வாய்ப்பை சித்ராவுக்கு வழங்கட்டும்!


Sunday, February 06, 2011

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு!

பிப்ரவரி 15ஆம் தேதி நான் கொஞ்சம் மனதில் மகிழ்ச்சி கொள்ளப் போகிறேன்!

இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய நானும் ஒரு காரணம் என்று!







மறக்காமல் பின் குறிப்பையும் படித்து விடவும்!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


என்னுடைய நெருங்கிய இருநூத்து சொச்சம் நண்பர்கள் எனக்கு அனுப்பிய இ-மெயில்:

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
Petrol in Pakistan Rs17 per litr
Mala ysia Rs 18 per litr
In India it's Rs.65per litr

Why is there a difference within India itself? World Market CRUDE Oil is not
the reason for this. It's all Gain for private owners? As we are the
general public, or Common Man as R.K.Laxman wud hv said, we have to
raise our voice, let's raise thru Emails and meaningful action on the ground

Forward this to all Indians who care.


IT HAS BEEN CALCULATED THAT IF EVERYONE DID NOT PURCHASE A DROP OF
PETROL FOR ONE DAY AND ALL AT THE SAME TIME, THE OIL COMPANIES WOULD
CHOKE ON THEIR STOCKPILES.

AT THE SAME TIME IT WOULD HIT THE ENTIRE INDUSTRY WITH A NET LOSS
OVER 4.6 BILLION DOLLARS WHICH AFFECTS THE BOTTOM LINES OF THE OIL
COMPANIES.

THEREFORE Feb.14th HAS BEEN FORMALLY DECLARED

"STICK IT UP THEIR BEHIND " DAY - THE PEOPLE OF THIS NATION SHOULD
NOT BUY A SINGLE DROP OF PETROL THAT DAY.

THE ONLY WAY THIS CAN BE DONE IS IF YOU FORWARD THIS E-MAIL TO AS
MANY PEOPLE AS YOU CAN AND AS QUICKLY AS YOU CAN TO GET THE WORD
OUT. WAITING ON THE GOVERNMENT TO STEP IN AND CONTROL THE PRICES IS
NOT GOING TO HAPPEN. WHAT HAPPENED TO THE REDUCTION AND CONTROL
IN PRICES THAT THE ARAB NATIONS PROMISED TWO WEEKS AGO?

REMEMBER ONE THING, NOT ONLY IS THE PRICE OF PETROL GOING UP BUT
AT THE SAME TIME AIRLINES ARE FORCED TO RAISE THEIR PRICES,
TRUCKING COMPANIES ARE FORCED TO RAISE THEIR PRICES WHICH AFFECTS
PRICES ON EVERYTHING THAT IS SHIPPED. THINGS LIKE FOOD, CLOTHING,
BUILDING SUPPLIES MEDICAL SUPPLIES ETC. WHO PAYS IN THE END? WE
DO!


WE CAN MAKE A DIFFERENCE.IF THEY DON'T GET THE MESSAGE AFTER ONE
DAY, WE WILL DO IT AGAIN AND AGAIN. SO DO YOUR PART AND SPREAD THE
WORD. FORWARD THIS EMAIL TO EVERYONE YOU KNOW. MARK YOUR
CALENDARS AND MAKE* *
*Feb.* 14 th

A DAY THAT THE CITIZENS SAY
"ENOUGH IS ENOUGH"

We forward so many junk email to many of our friends, now let us do
it for some useful cause to cut down the price of the petrol .. ....

REMEMBER : *Feb * 14 th

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

பின் குறிப்பு: [வாங்க.. நேரா இங்க வந்துட்டீங்களா?! ;-)) ]

நிச்சயமாக 13ஆம் தேதி எல்லோரும் பெட்ரோலுக்காக அங்கும் இங்கும் அலையப் போவது நன்றாகவே புரிபடுகிறது!!

இதற்கு மாறாக, வாகனங்கள் வைத்திருக்கும் எல்லோரும் ஒரு வார காலம் பெட்ரோல் வாங்காமல் தங்கள் கோபத்தைக் காட்டியிருக்க வேண்டும். எல்லோரும் பேருந்துகளை ஒரு வார காலம் நம்பி இருந்தால் தான் இது சாத்தியம்!  நம்ம மேனேஜர்களும் அதற்கு மனது வைத்தாக வேண்டும்.

அது நடக்குமா?